ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மாருக்கான அறிவித்தல்!ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்.

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்கு உணவுகளைக் கொள்வனவு செய்யும்பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள ரூபாய். 2,000/- பெறுமதியான வவுச்சர்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்று (07.12.2020) தொடக்கம் குறித்த வவுச்சர்களுக்கான பொருட்களை சாகாம வீதி, அக்கரைப்பற்று – 8/3 என்ற முகவரியிலுள்ள உதயம் பல்பொருள் அங்காடியிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் அறிவித்தல் விடுத்துள்ளனர். .
COVID-19 கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கமைவாக, குறித்த வர்த்தக நிலையத்தினால் கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்கு உணவுகளை வீட்டுக்கு வீடு விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 077 2267204 அல்லது 067 2057003 என்ற தொடர்பிலக்கத்துக்கு அழைத்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.