IPL இறுதிச் சுற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற அணிகள்!

ஐபிஎல் 2020 போட்டியின் இறுதிச்சுற்றில் மும்பை – டெல்லி அணிகள் மோதவுள்ளன.
ஐபிஎல் போட்டியின் 2 ஆவது தகுதிச்சுற்று (குவாலிஃபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.
அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் சோ்த்தது. ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி வீரா் ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகன் ஆனாா்.
ஐபிஎல் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்ற மும்பை இந்தியன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது டெல்லி.
ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி முதல்முறையாக இறுதிச்சுற்றில் விளையாடவுள்ளது. சிஎஸ்கே 8 முறையும் மும்பை இந்தியன்ஸ் 6 முறையும் அதிகபட்சமாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை முறை தகுதி பெற்றது என்று பார்க்கலாம்.
8 – சிஎஸ்கே
6 – மும்பை இந்தியன்ஸ்
3 – ஆர்சிபி
2 – கேகேஆர்
2 – சன்ரைசர்ஸ்
1 – டெக்கான் சார்ஜர்ஸ்
1 – கிங்ஸ் லெவன் பஞ்சாப்
1 – ராஜஸ்தான் ராயல்ஸ்
1 – ஆர்பிஎஸ்
1 – டெல்லி கேபிடல்ஸ்