தொழில்நுட்பம்

VIBER இடமிருந்து இலங்கையில் பிரத்தியேகமான இராசிபலன் BOT கணிப்பு சேவை அறிமுகம்

Viber இலங்கையில் தனது முதலாவது இராசி பலன் Chatbot அறிமுகம் செய்துள்ளது. வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும் நட்சத்திர இராசி பலன்களை வெளிக் கொணர உதவும் வகையில் இந்த bot அமைந்துள்ளதுடன், உங்களின் தினசரி மற்றும் வாராந்த இராசி பலன்களை கணிப்பிட்டு வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

உங்கள் இராசி பலன்களை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு செலவு நேரிடலாம். ஆனாலும் Viber இன் இந்த புதிய chatbot முற்றிலும் இலவசமானதாக அமைந்துள்ளது. மேலதிகமாக, இந்த bot இனூடாக, உங்கள் மொழித் தெரிவில் இராசி பலன்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இலங்கையர்களின் வாழ்க்கையில் ஜோதிடம் என்பது முக்கிய அங்கம் வகிக்கின்றது. பிறப்பு முதல் ஜோதிட கணிப்பை பின்பற்றி, வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் அனைத்திலும் ஒரு நம்பிக்கையான ஜோதிடரை அணுகி, கால நேரத ;தை கணித்து அதற்கேற்ற வகையில் அவற்றை மேற்கொள்வார்கள்.

Viber இன இந்த ஜோதிட bot ஊடாக, பாவனையாளருக்கு பயன்படுத்த எளிமையான அனுபவம் வழங்கப்படுவதுடன், தினசரி மற்றும் வாராந்தம் சுருக்கமாக 12 இராசிகளுக்குமான பலன்களை பெற்றுக் கொள்ளும் அனுபவத்தை வழங்குகின்றது. உங்களின் நாள் எப்படி அமைந்திருக்கும், வீட்டில் மற்றும் பணியிடத்தில் உங்கள் உறவு எப்படி அமைந்திருக்கும் போன்ற தகவல்கள் வழங்கப்படும். Viber’s custom sticker pack ஐ டவுன்லோட் செய்யும் போது சுயமாக இந்த ஜோதிட chatbot க்கு உங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த பிரத்தியேகமான உள்ளம்சம் தொடர்பாக Rakuten Viber இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஒஃபிர் இயால் கருத்துத் தெரிவிக்கையில், ´இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பாவனையாளர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எமது நோக்காக அமைந்துள்ளது. இதற்காக இவ்வாறான புதிய உள்ளம்சங்களை நாம் அறிமுகம் செய்கின்றோம். எனவே, ஜோதிட chatbot ஐ எம்மால் வழங்கி, அதனூடாக பாவனையாளர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் களிப்பையும் ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்´ என்றார்.

இலங்கைச் சந்தைக்கு Viber இன் மற்றுமொரு புத்தாக்கமான உள்ளம்சமாக இந்த chatbot அமைந்துள்ளது பாவனையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்குவதுடன், 132,000 பாவனையாளர்களை கொண்டுள்ளது. தினசரி வாழ்க்கையில் இராசி பலன்கள் எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதில் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ள இலங்கையர்களை இலக்காகக் கொண்டு இந்த உள்ளம்சம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker