ஆலையடிவேம்பு

பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சங்காபிகேமும் கும்பாபிசேக மலர் வெளியீடும்

வி.சுகிர்தகுமார்  

  அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழாவின் பின்னர் இடம்பெற்ற முதலாவது சங்காபிகேமும் கும்பாபிசேக மலர் வெளியீடும் நேற்று நடைபெற்றது.

ஆலயத்தின் கும்பாபிசேகமானது ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலை 6மணி தொடக்கம் 7.20 மணிவரையுள்ள சுக்கிலபட்சத்து தசமி திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் இறைவன் திருவருளால் இடம்பெற்றது.

தொடர்ந்து 48 நாள் மண்டலாபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன் நேற்று 1008 சங்குகளாலான சங்காபிசேக கிரியைகள் இடம்பெற்றது.

ஆலய தலைவர் மா.இரகுநாதன் தலைமையில் இடம்பெறும் சங்காபிசே  கிரியைகள் யாவும்; ஆலய பிரதமகுரு வித்தயாசாகரர் சிவஸ்ஸ்ரீP புண்ணிய கிருஸ்ணகுமாரக்குருக்கள் தலைமையில்; நடைபெற்றது.

அதிகாலையில் சங்காபிசேக கிரியைகள் ஆரம்பமானதுடன் அடியார்கள் புடைசூழ அரோகாரா எனும் பக்தர்களின் வேண்டுதலுடன் பிரதான கும்ப வெளிவீதி உலா இடம்பெற்று மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரருக்கும் சங்காபிசேகம் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஆலய தலைவர் தலைமையில் கும்பாபிசேக மலர் வெளியீடும் கும்பாபிசே இறுவட்டு வெளயீடும் நடைபெற்றது.

ஈழ வளதிருநாட்டின் கிழக்கே மீன்பாடும் தேனாடாம் மட்டு நகருக்குத் தெற்கே அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகரிலிருந்து இருமைல்களுக்கு அப்பால் சாகாமம் வீதியில் பனங்காடு என்னும் பெயரில் அழகிய கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றி வற்றாத ஜீவநதியாக தில்லைநதி வளைந்து பாய்கின்றது. செந்நெல் விளையும் செழிப்பு மிகு வயல் நிலங்கள் நிறைந்து விளங்குகின்றன. கடல்,ஆறு, குளம் ஆகிய மூன்று நீர் நிலைகளும் முறையுற அமைந்து மேலும் இக்கிராமத்தை அழகூட்டுகின்றன. இத்தகைய இயற்கை எழில்கள் நிறைந்த இக்கிராமத்தில் கிழக்கே முதலும் முடிவும் இல்லா முழுமுதற் பெருமான்   ஸ்ரீ பாசுபதேசுவரர்  என்ற நாமத்தோடு அன்னை ஸ்ரீ மாதுமை அம்பாள் சகிதம் வீற்றிருந்து அருள் பாலித்தருளுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker