இலங்கை
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது: பிரதமர்

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை இம்முறை சமர்ப்பிப்பதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் இருந்து டிசம்பர் வரையான காலப் பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட இறுதியில் அடுத்த வருடத்திற்காக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என்பதால், அரச பணம் தவறாக பயன்படுத்தப்படாது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.