ஆலையடிவேம்பு

பனங்காடு ஸ்ரீநாககாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதிப்பும் தீர்த்தோற்சவமும்….

வி.சுகிர்தகுமார்

வரலாற்றுச்சிறப்புமிக்க அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீநாககாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதிப்பும் தீர்த்தோற்சவமும் இன்று (01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை தீமிதிப்பு இடம்பெற்றது. இதில் பெருமளவிலான பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனவள் தீர்த்தோற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடியார்கள் புடை சூழ கேணிக்கரைக்கு தூக்கிச் செல்லப்பட்டாள். அங்கு இடம்பெற்ற தீர்த்தோற்சத்தில் பக்தர்கள் கலந்து அம்மன் அருள் பெற்றனர்.

கடந்த 21ஆம் திகதி  கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான திருச்சடங்கானது 29ஆம் திகதி இன்று இடம்பெற்ற பாற்குடபவனி மற்றும் அம்மனின் ஊர்வலத்துடனும் சக்தி மகா யாகம் நோர்ப்பு நெல் நேர்தல் ஆகிய கிரியைகளுடனும் இன்று காலை இடம்பெற்ற பக்தி ததும்பும் தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவம் ஆகியவற்றுடனும் 08ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.

ஆலய தலைவர் க.கந்தையாபிள்ளை தலைமையில் இடம்பெற்ற தீமிதிப்பிலும் தீர்த்தோற்சவத்திலும்  பெருந்திராளான அம்மன் அடியவர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்தியை நிறைவு செய்தனர்.

பின்னர் ஆலயத்தில் இடம்பெற்ற அம்மனுக்கான விசேட பூஜையிலும் கலந்து கொண்ட பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலய வழிபாட்டு பிரதான கிரியைகள்  யாவற்றையும் ஆலய பிரதமகுரு சிவசக்தி உபாசகர் சிவஸ்ரீ வி நடராஜா ஆரம்பித்து வைத்ததுடன் தீமிதிப்பு கிரியைகளை பூசகர் சிவத்திரு க.யோகானந்தம் தலைமையிலான பூசகர்களும் தீர்த்தோற்சவ கிரியைகளை ஆலய உற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ ந.சதீஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ கஜமுகசர்மா மற்றும் சிவஸ்ரீ த.குகனேஸ்வரசர்மா உள்ளிட்ட குருமார்களால் நடாத்தி வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker