ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயம் முதல் சின்ன முகத்துவாரம் வரை சிரமதான பணி திறன்பட பயனுள்ளதாக இடம்பெற்றது….

அபிராஜ், ஜினுஜன்
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் இன்று (11.09.2020) காலை 06.00 மணி முதல் காலை 08.00 மணி வரை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கடற்கரை கரையோர பகுதியான நாகதம்பிரான் ஆலயம் தொடக்கம் சின்ன முகத்துவாரம் வரையிலான பகுதியில் பருவ மழை ஆரம்பம் என்பதால் தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து பொருட்களும் மற்றும் குப்பைகளும் அகற்றும் முகமாக சிரமதான பணிகள் திறன்பட பயனுள்ளதாக இடம்பெற்றது.
சிரமதான பணிகளுக்கு அக்கரைப்பற்று இராணுவ பொறுப் அதிகாரிகள் மற்றும் 241 படை பிரிவு இராணுவத்தினரும் பங்களிப்புகளை வழங்கி இருந்தார்கள் மேலும் ஆர்வம் உள்ள பலரும் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்புக்களை வழங்கி இருந்தார்கள்.
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் இதற்கு முன்பாகவும் மிகவும் முக்கியத்துமான பல சிரமதானப்பணிகள் இடம்பெற்று வந்திருக்கின்றமையும் அனைவர் கவனத்தை ஈர்த்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று திறன்பட செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.