அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கம் புதிய குற்றசாட்டு

சுகாதார மற்றும் சுதே சமருத்துவ அமைச்சர் ராஜித சேனா ரத்ன தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரைச் சுகாதார அமைச்சில் நியமித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடத்தில் முறையிடவுள்ளதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தன்னிச்சையான செய்பாடுகளின் நிமித்தம் சுகாதார அமைச்சினுள் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளடங்கலாக 13 இடங்களில் முறைப்பாடு செய்துள்ளோம். அவர் மீது நாம் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையாகும். இவ்வாறானதொரு நிலையில் சுகாதார அமைச்சர் தமது அமைச்சிற்கு 29 பேரை உள்வாங்குவதற்கான நடடிவக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இந்த 29பேரையும் தேர்தலின் போது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அவர் நியமிக்கவுள்ளார். இந்த 29 பேரில் ஊடகப்பேச்சாளராக ஒருவரும் பிரதி ஊடக ஒருங்கிணைப்பாளராக ஒருவரும், தட்டச்சு வேலைக்காக இருவரும். ஏனைய பதவிகளுக்கும் 29 பேர் வரையில் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இந்த நடவடிக்கைத் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரிடத்தில் முறைப்பாடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
				
					


