இலங்கை
அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு!!!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டேகொட இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல்-21 பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புடையோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளுக்காகவும் பயங்கரவாத தடைச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்பட மாட்டாது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.