ஆலையடிவேம்பு
புளியம்பத்தை ஸ்ரீ மருதயடி விநாயகர் ஆலய மூலஸ்தானம் நிர்மாணிக்கப்பட்டு விக்கிரகம் நிறுவப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராம ஸ்ரீ மருதயடி விநாயகர் ஆலயம் சிறிய அளவில் ஓர் மரத்தின் அடியில் பிள்ளையார் விக்கிரகம் வைக்கப்பட்டு சுமார் 35 வருடங்களாக பிரதேச மக்களினால் வணங்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் புளியம்பத்தை ஸ்ரீ மருதயடி விநாயகர் ஆலைய நிர்வாகத்தினரினால் ஆலயத்திற்கான மூலஸ்தானம் நிர்மாணிக்கப்பட்டு இன்றைய தினம் ஆலய மூலஸ்தானத்திற்குள் புதிய பிள்ளையார் விக்கிரகம் நிறுவப்பட்டது. .
மேலும் இன்றைய தினம் எண்ணைக்காப்பு சத்தும் நிகழ்வும் இடம்பெற்று மதிய நேர சிறப்பு பூசை நிகழ்வுகளும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றது.