இலங்கை
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்கு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் இணக்கப்பாட்டுடன் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.