ஆலையடிவேம்பு

77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பில் இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்: இளைஞர் யுவதிகள் இணைந்து கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள முடியும் -ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்

வி.சுகிர்தகுமார்  

  இலங்கை இராணுவத்தில் வெற்றிடமாகவுள்ள 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பில் இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். ஆகவே இச்சந்தர்ப்பத்தை எமது பிரதேச இளைஞர் யுவதிகள் பயன்படுத்தி அரச துறை ஒன்றில் இணைந்து கொண்டு நல்வழியில் பயணித்து தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள முடியும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டு இணைத்துக்கொள்ளபட்டவர்களுக்கு மேலதிகமாக இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அவ்வாறு இணைத்து கொள்ள கூடிய இளைஞர் யுவதிகளுடனான விழிப்பூட்டல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.சந்திரபவன் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.சிவநேசன் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட வளவாளர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது 100 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டதுடன் ஒழுக்கம் பயிற்சி மற்றும் சம்பளம் அவர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்;டது.
77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் வெற்றிடமாகவுள்ள 77 பதவிகளில் அவர்கள் விண்ணப்பித்த பதவிக்கு இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் தலைமைத்துவ பயிற்சி உட்பட் தொழில்சார் பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு பதவிகள் யாவும் ஓய்வூதிய உரித்துடையதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான சகல சலுகைகளும் வழங்கப்படும்.எனவும் குறைந்த பட்ச திரட்டிய சம்பளம் 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker