மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் பெண் தலைமைத்துவ 286 அங்கத்தவர்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டது.

-கிரிசாந் மகாதேவன்-
கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் பெண் தலைமைத்துவம் கொண்ட70 வயதை அடைந்த 286 அங்கத்தவர்களுக்கு தலா 1050/- பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று (02) வழங்கப்பட்டது.
மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் சங்கத் தலைவி திருமதி பி.மங்கையர்க்கரசி அவர்களின் தலைமையில் குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் ஆனா ஜனாப்.ஏ.எல்.முஹம்மத் அஸ்மி, தலைமைக்காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (கணக்காய்வாளர்) ஜனாப் எம்.எம்.பரீட் , கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜனாப்.யு.எல்.பெளஸ், ஜனாப்.எம்.சி.ஜலால்டீன், ஜனாப்.எ.சி.எம்.அஸ்ரப், ஜனாப்.ஷாபி ஆகியோரும் மற்றும் சங்கத் செயலாளர் S.திலகராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கல் நிகழ்வானது கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.