கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி . நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு திருக்கோவில் வலயக்கல்வி பணிமனையில் இன்று….

ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்து கல்வி வலயத்தினை உயர்த்துவதற்காக முழுமூச்சாக பாடுபட்டு தற்போது கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றிருக்கும் திருமதி . நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்களை கெளரவிக்கும் நிகழ்வானது திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன் தலைமையில் இன்றைய தினம் (28) வியாழக்கிழமை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது .
இந் நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அவர்களை திருக்கோவில் பிரதேச ஆசிரியர்கள் ,அதிபர்கள் , வலயக்கல்வி பணிமனையின் உத்தியோத்தர்கள் ஆகியோர் கல்வி பணிப்பார் அவர்களை பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன் கிழக்கு மாகாண கல்விப்பணிபாளர் அவர்ளுக்கு நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மாணவர்களுடைய நடன நிகழ்வும் இடம்பெற்றது.
நடனமாடிய மாணவர்களுக்கு பரிசுப்பொதியும் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.