உலகம்
இரண்டாம் உலகப்போரின் வீசப்பட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது!

இரண்டாம் உலகப்போரின் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
தென்முனைக் கடல் பகுதியில் சில ஆய்வாளர்கள் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பலை ஆராய்ச்சி செய்த போது, அதில் 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 6 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட வெடிகுண்டு கப்பலுக்கு வெகு தொலைவில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமாக வெடித்துச் சிதறிய குறித்த வெடிகுண்டு சுமார் 900 கிலோ எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் எடுத்துச் செல்லும் போதோ அல்லது கப்பலில் இருந்து வீசப்பட்ட போதோ குறித்த வெடிகுண்டு கப்பலுக்குள் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.