ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச கோளாவில், அம்மன் மகளிர் இல்லத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி தின போட்டி நிகழ்வுகள்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகமும் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனும் இணைந்து நடாத்தும் மஹா சிவராத்திரி தின போட்டி நிகழ்வுகள் 2026 நிகழ்வு இன்றைய தினம் (14) காலை ஆலையடிவேம்பு பிரதேச கோளாவில், அம்மன் மகளிர் இல்லத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதனில் அறநெறி மாணவர்கள் கோலம் போடுதல், தோரணம் கட்டல், நிறைகுடம் வைத்தல், சிவலிங்கம் செய்தல், சித்திர போட்டி, சரம் கட்டல் மற்றும் பூ மாலை கட்டல் போன்ற போட்டிகள் ஆர்வமாக அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர் இதனில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.



