இலங்கை
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 41பேர் கைது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், நேற்று காலை வரையான காலப்பகுதியில் 60 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 1,390 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றுமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.