விளையாட்டு
சிம்பாப்வே அணிக்கு அதன் மண்ணில் அதிர்ச்சி கொடுக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், சிம்பாப்வே அணிக்கு சீன் வில்லியம்சும் தலைமை தாங்கவுள்ளனர்.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இதுவரையில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 13 போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளதுடன், சிம்பாப்வே அணி எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை.
இறுதியாக இலங்கை அணி ரங்கன ஹேரத் தலைமையில் சிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொடரை 2-0 என வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 27ஆம் திகதி ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.



