விளையாட்டு

36 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்தியா!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தனது மிகக் குறைந்த டெஸ்ட் ஓட்டங்களை பதிவு செய்து உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பாட்டம் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 233 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. அஸ்வின் 15 ஓட்டங்களுடனும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

2 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதுமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், 300 ஓட்டங்களை இந்தியா எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மேற்கொண்டு 11 ஓட்டங்களை மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது.

இந்திய அணியில் உமேஷ் யாதவ், நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் வேகத்தில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறினர். மேத்யூ வேட் (8 ஓட்டங்கள்) ஜோ (8 ஓட்டங்கள்) ஆகியோர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 3 ஆம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய லாபுசேன் (47 ஓட்டங்கள் ) ஓரளவு தாக்குப்படித்தார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. உமேஷ் யாதவும் தன் பங்குக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

அதேபோல், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விழிபிதுங்கினர். அவரின் மாயாஜால சுழலில் சிக்கிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 72.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த அவுஸ்திரேலிய அணி 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டி பெய்ன் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் அடித்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 53 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடியது.

பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் கொடுத்தது. பிரித்வி 4 ஓட்டங்கள் எடுத்து போல்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 9 ஓட்டங்கள் எடுத்து, 62 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. மயங்க் அகர்வால் (5), ´நைட் வாட்ச்மேன்´ பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய பேட்ஸ் மேன்கலீன் விக்கெட் மளமள வென சரிந்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் 3 வது நாளில் இந்தியா 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறினார். காயம் காரணமாக அநேகமாக அவர் இன்று பந்து வீச மாட்டார் .

அதனடிப்படையில் இந்தியா தனது மிகக் குறைந்த டெஸ்ட் ஓட்டங்களை இன்று பதிவு செய்து உள்ளது.

இதற்கு முன் 1974 ஆம் ஆண்டில் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் மிகக் குறைந்த ஓட்டங்கள் 42 ஆகும்.

அவுஸ்திரேலியா அணியின் வெற்றி பெற 90 ஓட்டங்கள் தேவை. தொடர்ந்து அவுஸ்திரேலிய தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்ய தொடங்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker