ஆலையடிவேம்பு
31 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம்…

“பூரணத்துவமான மனித சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்’
“நித்தமும் புத்தறிவினைப் படைப்போரும் ஆசிரியர்களே’ என்பதற்கிணங்க அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம் அவர்கள் 31 வருட ஆசிரியர் சேவையில் இருந்து இன்றைய தினம் (15) ஒய்வு பெறுகிறார்.
ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம் அவர்கள் (1990/10/15) ம் திகதி திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான பட்டாதாரி ஆசிரியராக கடமையேற்று சிறந்த முறையில் கடமையாற்றி இன்று ஓய்வு பெற்று செல்கின்றார்.
ஒய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம் அவர்களை பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர் மாற்றும் மாணவர்கள் என்பவர்கள் வாழ்த்தி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.