227 ஓட்டத்துடன் இலங்கை!

நியூஸிலாந்து அணியுடான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
நேற்றைய தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கையானது இன்றைய இரண்டாம் நாள் முடிவின்போது 80 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 39 ஓட்டத்துடனும், லஹரு திரிமான்ன 10 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 53 ஓட்டத்துடனும், அஞ்சலோ மெத்தியூஸ் 50 ஓட்டத்துடனும், குசல் பெரேரா ஒரு ஓட்டத்துடனும், தனஞ்சய டிசில்வா 5 ஓட்டத்துடனும், அகில தனஞ்சய டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க, நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டத்துடனும், சுரங்க லக்மால் 28 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் அஜஸ் பட்டேல் 5 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.