அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை இன்று ஆரம்பம்…

R. அபிராஜ் , V. ஜினுஜன்
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று (24) சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது .
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை கடந்த சனிக்கிழமை (20) ஆரம்பிக்கப்பட இருந்தபோதிலும் அண்மையில் ஏற்பட்ட சிறு மழை மற்றும் மப்பும் மந்தாரமான காலநிலை காரணமாக விவாசகிகள் நெல் அறுவடையில் தயக்கம் காட்டி வந்தநிலையில் இன்றைய தினம் நெல் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகளில் இவ்வருடம் சிறுபோகத்தில் 350 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளமையினால் நெல் விற்பனையில் விவசாயிகள் எதிர்நோக்கும் விலைப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் முகமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய மாவட்ட மட்டத்தில் நெற் சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.