2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெஃப்

2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) தெரிவித்துள்ளது.
ஏழ்மையான நாடுகளான ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் முதல் தவணையாகப் போட்டப்பட்ட தடுப்பூசியின் முடிவின்படி 70.4 வீதம் பயனளித்துள்ளது.
அத்துடன், இரண்டாம் தவணையாகச் செலுத்திய தடுப்பூசியின்படி 90 வீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, அமெரிக்காவில் தயாராகும் பைசர் மற்றும் பயான்டெக் நிறுவன தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி ஆகியன நல்ல பலனை தந்துள்ளன.