அரசின் உத்தரவிற்கமைய ஆலையடிவேம்பில் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்ளுக்கான நலனுதவி கொடுப்பனவு கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக வழங்க நடவடிக்கை

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் வாழும் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்ளுக்கான நலனுதவி கொடுப்பனவு அவர்களது காலடிக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.
தபால் நிலையங்களின் ஊடாக இதுவரையில் வழங்கி வைக்கப்பட்ட நலனுதவி கொடுப்பனவானது கொரோனா அச்சம் காரணமாக வழங்க முடியாத நிலையினால்; பிற்போடப்பட்டது.
இதனை கருத்தில் கொண்ட அரசாங்கம் அவர்களுக்கான கொடுப்பனவை பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டது.
இதனை அடிப்படையாக கொண்டு பிரதேச செயலாளர் கே.லவநாதனின் அனுமதியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் முதற்கட்டமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கண்ணகிகிராமத்தின் 1,2 பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்களான பி.கிருஷாந்த் மற்றும், எஸ். ஆகியோர் இணைந்து இப்பணியை முன்னெடுத்து கிராமங்களுக்கு சென்று கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.
இப்பணியில் கண்ணகிகிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்களான க.கோகுலன் த.பிரபு உள்ளிட்டவர்களும் இணைந்து கொண்டனர்.