உலகம்
இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் விரட்டப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே குடியுரிமை வழங்கப்படவில்லை – ஹெச்.ராஜா!

இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் விரட்டப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இதனை தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தால் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய சட்டதிருத்தம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
எனினும், இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.