20 வயது பெண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக (Best Athlet Under 20 Girls) அக்கரைப்பற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவி தெரிவு!

பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவி S.விபுர்சனா 20 வயது பெண்கள் பிரிவிற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் அக்கரைப்பற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு ஒரு தங்கம் ஒரு வெள்ளி ஒரு வெண்கலப் பதக்கங்களை பெற்றுத்தந்த மாணவர்களுக்கும் இவ் வெற்றிக்காக அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய எமது பாடசாலையின் அதிபர் பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர், பெற்றோரினருக்கும் வலயக் கல்வி பணிப்பாளர், பிரதிக் கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகரிற்கும் தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர் MJM.அஜ்மல் Sir, KT.தபாய் sir அவர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்கள் ACCM.ரமீன் Sir, V.தினேஷ்ராஜ் , R.கேமலக்சன் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.