இலங்கை
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு திருமதி .கலைவாணி மோனகாந்தன் அவர்களினால் மோட்டார் சைக்கிள் தரிப்பிடம்….

ஜே.கே.யதுர்ஷன்
அமரத்துவமடைந்த திருமதி.சிவகாமசுந்தரி பீதாம்பரம் (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் மகள் திருமதி.கலைவாணி மோகனகாந்த அவர்களின் நிதிப்பங்களிப்பில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிள் தரிப்பிடம் ஒன்றை அமைத்து அதனை இன்றைய (2022/01/12) தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இவ் நிகழ்வானது திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.P.மோகனகாந்தன் மற்றும் திருமதி.கலைவாணி மோகனகாந்தன் ,மற்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோத்தர் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.