விளையாட்டு
15ஆவது U19 உலகக்கிண்ணம்: நமிபியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரின் 12ஆவது லீக் போட்டியில், இலங்கை அணியும் நமிபியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
குழு ‘சி’இல் இரு அணிகள் மோதும் இப்போட்டி, கிம்பர்லே- டயமண்ட் ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
முன்னதாக இலங்கை அணி மோதிய முதல் போட்டியில், சிம்பாப்வே அணியை டக்வத் லுயிஸ் முறைப்படி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
இந்த நிலையில் தற்போது, தனது இரண்டாவது லீக் போட்டியில் நமிபியா அணியை இலங்கை எதிர்கொண்டு வெற்றிபெறும் வேட்கையில் உள்ளது.