இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்….

ஜே.கே.யதுர்ஷன்
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வோராண்டும் மார்ச் 8 ஆம் திகதி பெண்களின் உரிமைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை 1975 இல் தீர்மானிக்கப்பட்டது.
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு ஏற்பாட்டில் சாகாமம், குடிநிலம் கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் 2022 இற்கான மகளிர் தின நிகழ்வானது உதவிப்பிரதேச செயலாளர் திரு .௧.சதிசேகரன் தலைமையிலும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகக்தர் திருமதி. கலைவதனி திலீபன் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் இன்று (2022.03.08) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன் நிகழ்வில் மகளிர் பாதுகாப்பு பற்றிய பதாகை ஏந்திய கவனையீர்ப்பு பேரணியும், பெண்கள் உரிமை பெண்கள் பாதுகாப்பு பற்றிய குறு நாடகமும் சொற்பொழிவும் இடம்பெற்றது மேலும் பெண்களின் நடன நிகழ்வும் இதில் இடம் பெற்றது.