இலங்கை

ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் துணை விமானி சாட்சியம்!

வென்னப்புவ, லுணுவில பகுதியில் கிங் ஓயா ஆற்றில் விழுந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததை தனக்கும் பிரதான விமானிக்கும் உணர முடிந்ததாக, அந்த விமானத்தின் துணை விமானியான லெப்டினன்ட் எரங்க சாமர ஏகநாயக்க நேற்று (08) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அதன் பிரதான விமானி உயிரிழந்தமை தொடர்பான சட்ட நடைமுறை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்றில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது, கடந்த நவம்பர் 30ஆம் திகதி வென்னப்புவ லுணுவில பகுதியில் கிங் ஓயா வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிரதான விமானியான விங் கமாண்டர் 41 வயதுடைய நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்.

அப்போது நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் துணை விமானி லெப்டினன்ட் எரங்க சாமர ஏகநாயக்க இவ்வாறு சாட்சியமளித்தார்.

“இலங்கை விமானப்படையின் உத்தரவுக்கு அமைய, பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்க, கடந்த 30ஆம் திகதி மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து நாங்கள் பெல் 212 ஹெலிகொப்டரில் புறப்பட்டோம்.

வென்னப்புவவுக்கு மேல் வானத்தில் இருந்து விமானம் சற்றுக் கீழே இறக்கப்பட்டபோது, கிங் ஓயா பாலத்தின் மீதும் அதைச் சுற்றியும் இருந்த மக்கள் கைகளை அசைத்து உதவி கோரினர்.

பாலத்தின் மீதோ அல்லது சாலையின் மீதோ விமானத்தை தரையிறக்க முடியவில்லை.

இதற்குக் காரணம், பாலத்தில் அதிகமானோர் இருந்ததும், அதன் அருகே உயர் அழுத்த மின்கம்பிகள் இருந்ததும் ஆகும்.

இருப்பினும், கைகளை அசைத்த மக்களுக்கு உலர் உணவுப் பொட்டலங்களை நாங்கள் விடுவித்தோம். பொருத்தமான இடத்தில் விமானத்தை தரையிறக்க முயன்றபோது, அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக பிரதான விமானி நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கும் எனக்கும் தோன்றியது.

விபத்து இன்றி பொருத்தமான இடத்தில் தரையிறக்க முயற்சிக்கும்போது, பிரதான விமானி விமானத்தைத் திருப்பிய உடனேயே அது திடீரென கிங் ஓயாவில் விழுந்தது.

பெரும் முயற்சியுடன் வெளியே வந்த நானும் மற்ற மூன்று விமானப்படை வீரர்களும், உள்ளே சிக்கியிருந்த பிரதான விமானியின் இடுப்புப் பட்டிகளை அகற்றி, அவரை விரைவாக மாரவில வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம் என சாட்சியமளித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களைக் கருத்தில் கொண்ட மாரவில நீதவான் தினிந்து சமரசிங்க, விசாரணைகளை மேலும் முறைப்படுத்துமாறு அறிவுறுத்தினார்,

மேலும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கேட்டறிய வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்கவும் உத்தரவிட்டார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker