இலங்கை
இவ்வாறான இறப்புகளுக்கு இழப்பீடு கிடையாது : அரசாங்கம்

அபாயங்கள் இருந்தபோதிலும் கவனக்குறைவாக நீந்துவதால் ஏற்படும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக்கு தாம் பொறுப்பல்ல என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான மரணங்களை அனர்த்தமாகக் கருத முடியாது எனவும் அதனால் அந்த மரணங்களுக்கு தமது நிறுவனத்தால் இழப்பீடு வழங்க முடியாது எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட குளிக்கும் இடங்களில் மட்டுமே உயிர் காப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குளிப்பதற்கு பொருத்தமற்ற இடங்களில் எச்சரிக்கைப“ பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் குடி போதையினாலும் அலட்சியத்தினாலும் மரணிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.