ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சியுடன் தயராகி வருவதுடன்: இன்றைய தினம் கோழி இறைச்சியின் விலை 850/-

இன்று காலைமுதல் அதிகளவான மக்கள் சித்திரைப்புத்தாண்டை கொண்டாட்டத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் மற்றும் ஆடைகளையும் கொள்வனவு செய்து வந்தனர்.
மேலும் மக்கள் அதிகளவானவர்கள் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் ஆடை நிலையங்களில் குவிந்து காணப்பட்டதுடன் சந்தையிலும் அதிகளவான மக்கள் அத்தியாவசியமான பொருட்கள் கொள்முதல் செய்தமையினையும் காணக்கூடியதாக இருந்தது.
மேலும் ஆலயங்களில் இன்றைய தினம் மருத்து நீர் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மேலும் இந்த பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி 1kg ஆனது எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 800/- தொடக்கம் 850/- வரையிலான விலைகளில் இன்றைய தினம் விற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் பண்டிகை கொண்டாட்டத்தை பாதுகாப்பான முறையில் வழிபாடுகளை வீடுகளில் இருந்து மேற்கொள்ளவும், ஆலயங்கள் தோறும் அமைதியான முறையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற மற்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து பண்டிகை கால நிகழ்விகளை ஒழுங்குசெய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.