ஸ்ரீ இராமகிருஸ்ணா அரங்கு 1983 க.பொ.த சாதாரண மாணவர்களினால் திறந்து வைப்பு…
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை 1983 க.பொ. த சாதாரண தர மாணவர்களினால் இன்று (02) ஸ்ரீ இராமகிருஸ்ணா அரங்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி சங்க அமைப்பினுடாக இவ்வரங்கு அமைக்கப்பட்டதுடன். பாடசாலை காலை ஒன்று கூடலின் போது பாடசாலையின் பதில் அதிபர் க.ஜயந்தன் தலைமையில் அரங்கு உத்தியோக பூர்வமாக திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு சமூக அபிவிருத்தி சங்க அமைப்பின் தலைவர் சுந்தரம் சிவபாலன் பொருளாளர் சின்னத்தம்பி மணிமாறன் செயலாளர் சிவலிங்கம் கணகரெட்ணம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் சமூக அபிவிருத்தி சங்க அமைப்பின் சேவையினை பாராட்டி நன்றி நவிலல் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.