அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ”மக்கள் வங்கியின்” (ATM ) கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்: அது எங்கு நிறுவப்பட வேண்டும் என்பதில் எம் அவர் கவனம்???

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ”மக்கள் வங்கியின்” தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) கிடைப்பது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் ஒன்று இல்லாமல் மக்கள் தொலைதூரங்களுக்கு சென்று குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ளும் அவல நிலையில் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த நிலையில்.
பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற குறித்த வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் தன்னார்வம் கொண்ட சமுக அக்கறையாளர்கள், சமூக நலன்விரும்பிகள் என சமூகத்தின் பல தரப்பினரினாலும் பல பன்முக முனைப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்.
தற்போது எமது பிரதேசத்திற்கு தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) மக்கள் வங்கி நிறுவனத்தினுடாக கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனும் செய்தி மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) எங்கு நிறுவப்பட்ட போகிறது என்பது மக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது.
எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள குறித்த இயந்திரத்தை எம் மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் அனைவருக்கும் வசதியான இடத்தில் நிரந்தரமாக நிறுவி அதன் ஊடக இலகுவான அதியுச்ச பயனை எமது மக்கள் பெற்றிடவேண்டும் அல்லவா.
இவ்வாறான இடம் எமது பிரதேச மத்திய இடத்தில், எமது குடும்ப உறவுகள் அனைவரும் இலகுவில் பாதுகாப்பாக வந்து செல்லும் இடமாக இருக்கவேண்டும் என்பது புத்திஜீவிகள் மற்றும் சமூக நலன் கொண்டவர்களின் ஒருமித்த கருத்தாக காணப்படுகின்றது.
அந்த வகையில் எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் ஒரு பகுதியில் தானியங்கி தொலைபேசி பண மீள்நிரப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு இருப்பது போன்று கிடைக்க இருக்கின்ற தானியங்கி பண பரிமாற்ற இயந்திரத்தையும் பாதுகாப்பாகவும் நிரந்திரமாகவும் நிறுவிக்கொள்ளலாம் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அல்லது இது போன்ற ஓர் பொருத்தமான இடத்தில் நிரந்தரமாக நிறுவவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படும் சுமார் அண்ணளவாக நான்காயிரம் வங்கி வாடிக்கையாளர்கள் மக்கள் வங்கி, இலங்கை வங்கி , ஹட்டன் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளின் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் கோரி இருந்தார்கள்.
எவ்வாறாயினும் வங்கி வாடிக்கையாளர்களின் கோரிக்கை வீண்போகவில்லை மக்கள் வங்கி நிறுவனம் முன்வந்துள்ளது இதேபோல் ஏனைய வங்கிகளும் வடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய
முன்வரவேண்டும்.