வைத்தியர் மீது தாக்குதல்: பாதுகாப்பு இல்லையென பணி பகிஷ்கரிப்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள், தொடருமா இந்நிலை – பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் சிரமத்தில்

அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நேற்றய தினம் (17) பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இவ் சம்பவத்துக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு சேவைகளை வழங்கிவரும் பிரதான வைத்தியசாலையாக இருந்த போதிலும் இவ் வைத்தியசாலையில் பௌதிகவளம் மற்றும் ஆளனிபற்றாக்குறை காணப்படுவதாலயே மக்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுவதாக வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் தனக்கு அங்கு பாதுகாப்பு இல்லையென சேவையிலிருந்து விலகிக்கொண்டதையடுத்து இன்று மருத்துவச்சேவைக்கு சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் மீண்டும் வீடுகளுக்குச் திரும்பிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இவ் நிலை எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வைத்தியரை தாக்கியவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குரல்கள் வலுப்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வாற செயற்பாடுகள் இனியும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமானால் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை (பௌதிகவளம்,ஆண்சீற்றூழியர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்) நிவர்த்தி செய்ய உரிய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ள அபிவிருத்தி சங்கத்தினர் வைத்தியரினை தாக்கியவருக்கு விரைவாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.