வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அப்பாவி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சேவையை வழங்கமறுப்பது கண்டிக்க வேண்டியது மக்கள் ஆதங்கம்!

அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் கடந்த (17) செவ்வாய்க்கிழமை பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் தனக்கு அங்கு பாதுகாப்பு இல்லையென வைத்தியசேவையிலிருந்து நேற்றய தினம் விலகிக்கொண்டார்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது மேலும் தாக்கி நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் இரண்டாவது நாளாகவும் இன்று வைத்திய சேவை இடம்பெறவில்லை மருத்துவ சேவைக்காக அளிக்கம்பை, கண்ணகிபுரம், கவடாப்பட்டி போன்ற தூர பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு பணத்தை செலவுசெய்து வாடகைகளுக்கு வாகனங்களை பெற்று வருகைதந்த போதிலும் மருத்துவசேவை வழங்குவதற்கு எவரும் இல்லாத நிலையில் ஏழைமக்கள் பலர் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் மீண்டும் வீடுகளுக்குச் திரும்பிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இவ்வாறு குறித்த வைத்தியசாலை நிருவாகத்தினர் அப்பாவி மக்களுக்கு எவ்வாறு இலவசமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சேவையை வழங்கமறுப்பது கண்டிக்க வேண்டியது மக்கள் ஆதங்கம்.
இந்நிலை மேலும் தொடர்ந்தால் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு எதிராக செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என மக்கள் எச்சரிக்கை.