ஆலையடிவேம்பு
வெள்ளத்தில் மூழ்கிய அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி வீதி மற்றும் பாடசாலை வளாகம்…

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வருகின்ற கனத்த மழையினால் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வளாகம், வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு அறை என்பவற்றுள் மழை நீர் உள்ளே சென்றுள்ளதால் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி இன்றைய தினம் (20/02/2023) பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த பாடசாலையின் நூலகம் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து புத்தகங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டதுடன் பாடசாலைகளுக்குள் செல்கின்றன பாதைகளும் நீர் தேங்கி இருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.