இலங்கை
Trending

வீரமுனை -இரு தரப்பினரும் சமூக பொறுப்பினை கருத்தில் கொண்டு இயங்கவேண்டும்;நீதவான் ரஞ்சித்குமார் அறிவுறுத்தல்

சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும்

சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப் பாட்டிற்கு வரவேண்டும்.

இவ்வாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.ரஞ்சித்குமார் இன்று (15) திங்கட்கிழமை மன்றில் அறிவுறுத்தல் வழங்கினார்.

குறித்த வீரமுனை வரவேற்பு வளைபு வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளான சுதர்சன்,கமல் ,பெனிஸ்லஸ் துஷான்,அ.நிதான்சன் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தனர்.

இரு சமூகமும் சமூக. பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதவான் நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டது.

மேலும் இது அதிகாரம் சம்மந்தபட்ட விடயம் அல்ல இது சமூகம் சார்ந்த விடயம் எனவும் குறிப்பிடப்பட்டது.

மேலும் இந்த பிணக்கை இணக்கமாக சட்ட அனுமதியோடு தீர்ப்பதற்காக நீதிமன்றம் எதிர்வரும் வருடம் 09.01.2026 அன்றுவரை ஒத்திவைத்துள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker