தொழில்நுட்பம்

விஸ்வரூபம் எடுக்கும் Dark Web : நூற்றுக்கணக்கானவர்கள் கைது!!

நூற்றுக்கணக்கானவர்கள் கைது சிறுவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆ பாச வீடியோக்களை இணையங்களில் பகிருவது தற்போது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானியா மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த வருடம் இணையத்தளம் ஒன்று முடக்கப்பட்டிருந்தது.

குறித்த இணையத்தளத்தில் சுமார் 200,000 வீடியோக்கள் காணப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மில்லியன் தடவைகள் வரை தரவிறக்கம் செய்யப்பட்டுமிருந்தன. தென்கொரியாவில் இருந்து குறித்த இணையத்தளம் இயக்கப்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில் சுமார் 38 நாடுகளைச் சேர்ந்த 337 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றுள் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, அமெரிக்கா, தென்கொரியா, ஜேர்மனி, ஸ்பெயின், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கம் என ஐக்கிய இராச்சியத்தின் தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker