ஆலையடிவேம்பு
விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்

வி.சுகிர்தகுமார்
விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் எனவும் கூறினார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் இன்று முதல் விடுவிப்பதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
இந்நிலையில் ஆலையடிவேம்பில் விடுவிக்கப்பட்ட பிரிவுகளின் நிலை தொடர்பில் மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க அவர்களை தொடர்பு கொண்டு பேசியதன் பின்னரே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு எமது பிரதேசத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்காத வகையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.