கமு/திகோ/ பெருநாவலர் வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வு…

ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ/ பெருநாவலர் வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சித்திரைப் புத்தாண்டு புதுவருட சிறப்பு நிகழ்வு இன்று (04) வியாழக்கிழமை பாடசாலை அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பானதாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இனங்களுக்கு இடையில் ஒன்றிணைவை ஏற்படுத்தும் நல்ல நோக்குடன் எமது நாட்டில் காணப்படும் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சென்ஜோன் வித்தியாலயம், தர்மரத்ன சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் அல் ஹிதாயா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் குறித்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக அழைப்பின் பேரில் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டமை சிறப்புமிக்கதாக இருந்ததுடன்.
நிகழ்வின் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.v.பாபகரன் அவர்களும், விசேட அதிதியாக ஆலையடிவேம்பு கோட்ட பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.K.கங்காதரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக பெருநாவலர் வித்தியாலயத்தின் PSI ஒருங்கிணைப்பாளர் திரு.v.மேகவண்ணன் அவர்களும் , அக்கரைப்பற்று தமிழ் இலக்கிய பேரவையின் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு.அருள்ராஜா அவர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.
குறித்த சித்திரைப் புத்தாண்டு புதுவருட சிறப்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் மிட்டாய் பொறுக்குதல், சமநிலையோட்டம், பலூன் உடைத்தல், கயிறுழுத்தல், சங்கீத கதிரை போன்ற விளையாட்டு போட்டிகள் மாணவர்களை மகிழ்ச்சி அடையச்செய்யும் விதமாக இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.