இலங்கை
வாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு!

வாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக, கொழும்பு – பஞ்சிகாவத்த வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவியை வங்கிகள் வழங்க முடியாமையினாலும், டொலரின் பெறுமதி வீழ்ச்சியாலுமே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வாகன உதிரிப் பாகங்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, ஜப்பானிய புதிய மற்றும் பழைய வாகனங்களின் உதிரி பாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.