ஆலையடிவேம்பு
பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணி!

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணியை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.கடந்த இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இப்பணியானது நீரோட்டம் போதுமானதாக இல்லாத காரணத்தால் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இருப்பினும் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினை தவிர்ப்பதற்காக உரிய நேரத்தில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிய வருகின்றது.
இதேநேரம் பனங்காட்டுப்பாலத்தின் கீழாக மாத்திரமன்றி தில்லையாற்றின் பெரும்பாலான பகுதிகள் சல்வீனியா தாவரத்தினால் சூழப்பட்டதன் காரணமாக மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் அகழ்ந்து விடப்பட்டதன் காரணத்தால் வெள்ளத்தால் சூழப்பட்ட பெரும்பாலான பிரதேசங்கள் மற்றும் வயல்நிலங்களில் தேங்கியிருந்த வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.