வர்த்தக போர்: அமெரிக்காவுக்கும்- சீனாவுக்கும் இடையேயான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது!

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான முதற்கட்ட ஒப்பந்தம், கையெழுத்தாகியுள்ளது.
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இதற்கமைய நேற்று (புதன்கிழமை) தலைநகர் வொஷிங்டனில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த முதற்கட்ட ஒப்பந்தம், இரு பொருளாதார சக்திகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, தான் சீனாவுக்கு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று ட்ரம்ப் கூறினார்.