வருமானம் குறைந்த சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள்!!!

வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிருபங்களுக்கமைய சமுர்த்தி வங்கியினால் வருமானம் குறைந்த சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கியினூடாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரனின் வழிகாட்டல் மற்றும் பங்களிப்புடன் தலைமையக முகாமையாளர் ரி.பரமானந்தம் ஆலோசனையின் பிரகாரம் வங்கியின் முகாமையாளர்கள், தலைமையில் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டு திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பல பிரிவுகளின் மக்களின் வீடுகளுக்கு சென்று கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.
இதன்பிரகாரம் 1139 குடும்பங்கள் ரூபா 5000 வீதம் நிதியை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் , சிரேஷ்ட முகாமைதுவ உத்தியோகுத்தர் நடேசன் மற்றும் முகாமைத்துவ உத்தியோத்தர் வு.மோகனராஜன் சிரேஸ்ட கிராம சேவை உத்தியோத்தர் ம.இராஜரெட்ணம் மற்றும் சமுர்த்தி தலைமை காரியாலயமுகாமையாளர் வு.பரமானந்தம் மற்றும் சமுர்த்திவங்கி முகாமையாளர் கவிதா உதவிமுகாமையாளர் ஞானரெட்னம் மற்றும் ளு.ஆனந்த ராணி சீலன்
ஆகியோர் கலந்துகொண்டனர்.