இலங்கை
வரலாற்று சிறப்பு மிக்க உகந்தைமலை ஸ்ரீ முருகன் வருடாந்த ஆடிவேல் மகோற்சவ திருவிழாவை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி….

-கிரிசாந் மகாதேவன்-
வரலாற்று சிறப்பு மிக்க உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த ஆடிவேல் மகோற்சவ திருவிழா கடந்த (10) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடிவேல் மகோற்சவம் இடம்பெற்று வருகின்றது.
மகோற்சவ காலத்தில் உகந்தை முருகனை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆலயத்தினுள் பூசை நிகழ்வுகளை பார்ப்பதற்கு 50 பக்தர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும்.
அவர்கள் வெளியே வந்தவுடன் எனைய 50 பக்தர்கள் உள்ளே செல்ல முடியும் மேலும் வருபவர்கள் அங்கே தங்க முடியாது பூசை நிகழ்வு, ஆலய தரிசனம் செய்தவுடன் அன்றைய தினம் வீடு திரும்பவேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
எனவே பக்தர்கள் கவனமாகவும், சமூக இடைவெளி,சுகாதார நடைமுறையினை பின்பற்றி நடக்கவேண்டும் என சுகாதார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.