இலங்கை
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வெற்றிப் பெருவிழாவும் கெளரவிப்பும்….

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றப் பாதைக்கும், 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றடல் தங்க விருதுபெற முன்னோடியாக உழைத்த வைத்தியசாலையின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்ற இதேவேளை, தங்களின் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குமாறு வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வெற்றிப் பெருவிழாவும், 2019 ஜனாதிபதி சுற்றடல் தங்க விருதுபெற முன்னோடியாக உழைத்த வைத்தியசாலையின் ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் வைத்தியசாலையின் மண்டபத்தில் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம் ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்களான பி.கே.இரவீன்திரன், யுரேக்கா விக்ரமசிங்க, ஹிதாயா தாஜுதீன், அஜித்குமார, வைத்தியர் எம்.ஜே.நெளபல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஜனாதிபதி சுற்றடல் தங்க விருதுபெற முன்னோடியாக உழைத்த வைத்தியசாலையின் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சமுதாய பொறுப்பு நிருவன திட்டத்திற்கு உதவி வழங்கிய வெளி அமைப்பினர் உட்பட ஏனய சகல ஊழியர்களுக்கும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையானது 2019 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் தேசிய ரீதியாக தங்கவிருதும், தேசிய பசுமை அறிக்கை வெளியீட்டில் சிறப்பு விருதும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.