லங்கா பிரீமியர் லீக்: காலி அணி அபார வெற்றி!

நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14ஆவது போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகளால் கொழும்பு கிங்ஸ் அணியை வென்றுள்ளது.
இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்நிலையில், கொழும்பு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பாக, டி பெல் ட்ரமொண்ட் 44 ஓட்டங்களையும் சன்டிமல் 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் அமிர் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் சன்டகன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு, 172 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய காலி அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அணிசார்பாக, ஹசன் அலி 56 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக 38 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ச ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் அசாம் கான் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக மொஹ்மட் அமிர் தெரிவுசெய்யப்பட்டார்.