இலங்கை
ரெப்பிட் என்டிஜன் சோதனையில் 23பேருக்கு கொரோனா

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் என்டிஜன் சோதனையில், இதுவரை 23பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சோதனையின்போது, பாடசாலை மாணவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த மாணவரின் தந்தை, களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் ரெப்பிட் என்டிஜன் சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.