ஆலையடிவேம்பு
ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2023 உயர்தர மாணவர்களை வரவேற்றல் நிகழ்வு இன்று….

-காந்தன்-
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2023 உயர்தர மாணவர்களை வரவேற்றல் நிகழ்வானது (01/02/2022) இன்று காலை 11.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், அதிதிகள் உரை அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பனவும் சிறப்பானதாக இடம்பெற்றது.
மேலும் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.